உதவி


எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணைய வழி சேவைகள்

பொது மக்கள் இந்த இணைய வழி சேவையை பயன் படுத்தி தமிழ் நாட்டில் உள்ள தங்கள் நிலம் மற்றும் வீடு பற்றிய கீழ் கண்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்

  1. 1. சிட்டா : சிட்டா என்பது வருவாய்த்துறையில் உள்ள முக்கியமான ஆவணம். இந்த ஆவணத்தில் சொத்து பற்றிய பரப்பு, அளவு, உரிமையாளர்கள், நஞ்சை அல்லது புஞ்சை ஆகிய விவரங்கள் இருக்கும். இந்த ஆவண விவரங்கள் கிராம அலுவலர் அலுவலகத்தில் இருக்கும். பொது மக்கள் சிட்டா பதிவேட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  2. 2.அ -பதிவேடு : இந்த பதிவேடு வருவாய் துறையில் உள்ள கிராமப் புறம் உள்ள நிலங்கள் பற்றிய விவரங்களை கொண்டது. இந்த பதிவேட்டில் புல எண் ,உட் பிரிவு எண் , பட்டா எண் , பரப்பு அளவு , நிலத்தின் தரம், நில வரி, மண் வயனம் மற்றும் தரம் , நீர் ஆதாரம் மற்றும் உரிமையாளர்கள் இருக்கும்
  3. 3. நகர நில அளவை பதிவேடு : இந்த சேவை மூலம் நகர புறத்தில் உள்ள நிலங்களின் விவரங்களான ப்ளாக் , வார்டு , உரிமையாளர்கள் மற்றும் நிலத்தின் பிற விவரங்களை அறிய முடியும்.
  4. 4. புல படம் : கிராமப் புறத்தில் உள்ள குறிப்பிட்ட நிலத்தின் புல வரை படத்தை காண முடியும்
  5. 5. பட்டா மா றுதலக்காக செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலைப்பாட்டை அறிய முடியும்.

இந்த சேவையை சிறப்பாக பயன் படுத்த பொது மக்கள் தங்கள் வசம்

  1. 1. புல எண் , உட் பிரிவு எண் மற்றும் உரிமையாளர்கள் விவரங்களை வைத்து இருக்கவும்.
  2. 2. விண்ணப்ப எண் - பட்டா மா றுதலின் நிலைப்பாட்டை அறிய